ஆப்ரிக்க நாடுகளில் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் 5.5 கோடி பேர் பட்டினியில் வீழும் அபாயம்
நைஜீரியா, கானா, சியாரா லியோன், மாலி உள்ளிட்ட மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஐந்தரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியில் தள்ளப்படக்கூடும் என ஐநா உலக உணவு திட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்த நாடுகளில் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு மேல் உயர்ந்து விட்டதால் தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பிரச்சனைகளை தீர்க்க மற்ற நாடுகள் உதவ வேண்டும் என ஐநா உணவு திட்ட அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Comments