ஜெயலலிதா சிறை செல்ல காரணமாக இருந்தவர் செல்வகணபதி: இபிஎஸ்

0 523

சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேசுக்கு ஆதரவாக கோட்டை மைதானத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிதான் ஜெயலலிதா சிறை செல்ல காரணமாக இருந்தவர் என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டு விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ஏழைகளுக்கு மருத்துவம் கொடுப்பதை கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி புகார் கூறினார்.

தேர்தல் பத்திரம் குறித்து பேச திமுகவுக்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ தகுதி இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக 656 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றதற்கு பதில் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments