கோவையில் ஐஐஎம் உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படும்: அண்ணாமலை
தாம் வேட்பாளர்களை எதிர்த்து தேர்தலில் நிற்கவில்லை, மாற்றத்துக்காகவே நிற்கிறேன் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.
இந்திய சர்வதேச வர்த்தக சபை சார்பில் கோவையில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, அடுத்த 25 ஆண்டுகால இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க, வரப்போகும் 5 ஆண்டுகள் மிகவும் தேவை என்றார்.
கோவையில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் வெளிவருவதாக கூறிய அவர், வேலைவாய்ப்புக்காக அவர்கள் பெங்களூருவை நம்பியிருக்கும் நிலை மாற்றப்படும் என்றார்.
"கோவையின் தேவைகள்" என்ற தலைப்பிலான இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக, நா.த.க வேட்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்ணாமலை மட்டுமே பங்கேற்றார்.
Comments