100 வாக்குறுதிகள், 500 நாட்களில் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
எம்.பி.யாக தேர்வானதும் முதல் வேலையாக கோவையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வழிவகை செய்யப்படும் என்று கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீக தலங்களுக்கு கோவையிலிருந்து 10 புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சில்லென்று இருந்த கோவையில் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி அளவுக்கு குறைக்கும் வகையில் பசுமை பரப்பு அதிகரிக்கப்படும் என்றும், வள்ளி கும்மிக்கு பாரம்பரிய கலையாக உரிய அங்கீகாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அண்ணாமலை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Comments