தண்டட்டியைக் கேட்டு வம்பிழுத்த தங்கர்பச்சான் உடனே கொடுக்க முன்வந்த மூதாட்டியின் அன்பால் நெகிழ்ச்சி!
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்கர்பச்சான் ஆண்டிகுப்பம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரை அணுகிய மூதாட்டி ஒருவர், நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் எனக் கூறினார். மூதாட்டிக்கு நன்றி சொன்ன தங்கர்பச்சான், அவர் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டிக்காட்டி எனக்குத் தருவீர்களா என கேட்டார்.
கொஞ்சமும் யோசிக்காத மூதாட்டி, தாராளமாகத் தருகிறேன் என தண்டட்டியை கழற்றச் சென்றார். அவரைத் தடுத்த தங்கர்பச்சான், சும்மாதான் கேட்டேன் எனக் கூறி மூதாட்டியை கட்டியணைத்துக் கொண்டு இந்த அன்பைவிட வேறென்ன வேண்டும் எனக் கூறினார்.
Comments