ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மேலும் கடுமையாகும்: பிரதமர் மோடி
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள மொத்த வழக்குகளில் வெறும் 3 சதவிகித வழக்குகள் மட்டுமே அரசியல்வாதிகள் தொடர்புள்ளவை என்றும், மீதமுள்ள 97 சதவிகித வழக்குகள் ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் கிரிமினல்கள் மீது தொடுக்கப்பட்டவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு அவர் அளித்த பேட்டியில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில், 2014 வரை வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தனது ஆட்சிக்காலத்தில் அது ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தெரிவித்தார்.
மக்கள் பணத்தை திருடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அடுத்த 5 ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Comments