கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா

0 246

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.

12 நாள்கள் நடைபெறும் திருவிழாவின்போது தினமும் காலை, மாலை இருவேளையும் நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி - அம்மன் வீதி உலா நடைபெறும். 

முக்கிய நிகழ்வுகளான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், 22-ஆம் தேதி தேரோட்டமும், 23-ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments