தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதியில் தண்ணீர் இன்றி வனவிலங்குகள் தவிப்பதாக தகவல்
தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதியில் காவிரி, பாலாறு வறண்டதால் யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வறட்சி காரணமாக, மேட்டூர் கொளத்தூர் அருகே உள்ள தண்டா தார்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் விளைபயிர்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Comments