காங் வேட்பாளருக்கு டீ குடிக்க காசில்லை - ரூபிமனோகரன் அதிசயமெல்லாம் காங்கிரசில் தான் நடக்குமாம்.. நம்புங்க..!

0 256

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு ஆதரவாக பணியாற்றவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நாங்குனேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் நாளை ராகுல் காந்தி நெல்லைக்கு வர இருக்கும் நிலையில் திடீரென பரப்புரையில் ஈடுபட்டார். தளவாய்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், வேட்பாளர் ராபர்ட் புரூஸின் எளிமையை கூறும் சாக்கில், டீ குடிக்க கூட காசில்லாதவர் என்று விமர்சித்தார்

ராபர்ட் புரூஸ் தோற்றால் நாங்கள் பொறுப்பல்ல என காங்கிரஸ் தலைமைக்கு நாங்குநேரி காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட எதிர்ப்பு கடிதம் குறித்த கேள்விக்கு மழுப்பலாக அவர் பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments