காஸா மீது இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில்... ஹமாஸ் தலைவரின் மகன்கள், பேரக்குழந்தைகள் 7 பேர் பலி
காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே, தங்கள் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மகன்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்ததாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ரமலான் தினத்தன்று, ஹனியாவின் 3 மகன்களும், 4 பேரக்குழைந்தைகளும் காரில் சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அனைவரும் கொல்லப்பட்டனர்.
கத்தாரில் சிகிச்சை பெற்றுவரும் பாலஸ்தீனர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்த ஹனியாவிடம் இந்த துயர செய்தியை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்வதால், பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் வைத்த நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்
Comments