வடகொரியாவில் போருக்குத் தயாராக வேண்டிய சூழல் - அதிபர் கிங் ஜாங் உன்
வடகொரியாவை சுற்றிலும் நிச்சயமற்ற அரசியல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் சூழ்ந்துள்ளதாகவும், இது போருக்குத் தயாராக வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.
தலைநகர் பியாங்யாங்கில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ராணுவம் மற்றும் அரசியல் பல்கலைக்கழக்கத்துக்குச் சென்ற அவர், மாணவர்களிடையே உரையாடியபோது இவ்வாறு தெரிவித்தார்.
வடகொரியா சமீப ஆண்டுகளாக அதிக அளவில் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வருதுடன், அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவ்வப்போது பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments