புரொஜெக்டர் பயன்படுத்தி நடுரோட்டில் தி.மு.க விளம்பரம்... தேர்தல் விதிகளை மீறியதாக அ.தி.மு.கவினர் புகார்
நாமக்கல் பரமத்தி சாலையில் இயங்கி வரும் "தந்தூரி ட்ரைப்ஸ்" என்ற உணவகத்திலிருந்து ப்ரொஜெக்டர் மூலம் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை சாலையில் ஒளிர விட்டனர்.
முறையான அனுமதி பெறாமல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சின்னத்தை ஒளிரவிட்டதாக அதிமுகவினர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்தனர். விரைந்து சென்ற போலீசார், புரொஜெக்டரை அணைத்து, உணவக நிர்வாகத்தினரை எச்சரித்துச் சென்றனர்.
Comments