திருமாவின் பிரசார வாகனத்தை வழிமறித்த தொண்டர்கள் வி.சி.க-வினரோடு மல்லுக்கட்டிய போலீஸார்...

0 481

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் தனக்கு பானை சின்னத்திற்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆரவாரத்தோடு திரண்டிருந்த அவரது கட்சியினர் சிலர் திருமாவளவன் தங்கள் பகுதிக்கு வர வேண்டுமென அடம் பிடித்தனர்.

ஏற்கனவே வகுக்கப்பட்ட பயணத் திட்டத்தின் படி தான் பிரசார வாகனம் செல்லும் என நிர்வாகிகள் கூறவே, அந்த தொண்டர்களோ திருமாவளவனின் பிரசார வாகனத்தை கட்சிக் கொடியோடு மறித்தனர்.

போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அடங்க மறுத்த தொண்டர்களிடம், தான் மற்றொரு ஊருக்கு போய் விட்டு திரும்பி வரும் போது உங்களது ஊர்களுக்கு வருவதாகக் கூறி அந்த ஊர்களின் பெயர்களை கேட்டுக் கொண்டார் திருமாவளவன்.

அதன்பின்னர் போலீஸாரும், கட்சி நிர்வாகிகளும் வழி ஏற்படுத்திக் கொடுக்கவே பிரசார வாகனம் புறப்பட்டுச் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments