5 வருசமா கார்த்தி சிதம்பரத்தை ஆளையே காணோம்..?ஆவேசமாக திரண்ட காங்கிரசார்.. வசமாய் சிக்கிய எம்.எல்.ஏ..!

0 390

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக சிறுவாச்சி , புத்தூரணி கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற எம்.எல்.ஏ மாங்குடியை முற்றுகையிட்ட உள்ளூர் காங்கிரசார் மற்றும் பெண்கள், வெற்றி பெற்று நன்றி கூட சொல்லவராமல், கார்த்தி சிதம்பரம் 5 வருஷம் எங்கே போனார் ? என்று கேள்வி எழுப்பினர்

அவர்களை சமாதானம் செய்ய முயல, தங்கள் பகுதி காங்கிரசாரை கார்த்தி சிதம்பரம் மதிக்கவில்லை என்றும் தங்கள் ஊருக்கு வந்த ஒரு பேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்

ஒருகட்டத்தில் எம்.எல்.ஏவுடன் வந்த ஒருவர், உள்ளூர்காரரை தாக்க முயன்றதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் உள்ளூர் மக்களை ஏச்சரித்து கலைந்து போக செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments