வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

0 725

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்குசேகரிப்பு

எனது அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் கூறி, பிரதமர் நரேந்திர மோடி வாக்குசேகரிப்பு

வேலூர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் பாலு, தருமபுரி செளமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து பிரதமர் வாக்குசேகரிப்பு

திருவண்ணாமலை அஸ்வத்தாமன், ஆரணி கணேஷ்குமார், கிருஷ்ணகிரி நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் வாக்குசேகரிப்பு

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி

வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப்போவதை, டெல்லியில் உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் - மோடி

தமிழ் மக்களின் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு உண்டு; தமிழ் மக்கள், தமிழக வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்

மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்; இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும் - மோடி

வீரம்நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரர், கடவுள் முருகப்பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன் - மோடி

தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது - மோடி

2014ஆம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிக்கையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன

21ஆம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம் - மோடி

இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா இருக்கிறது; அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது - பிரதமர்

இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்; அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது

வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்

சென்னை, பெங்களூர் தொழில்துறை வழித்தடம், வேலூர் வழியாகத் தான் செல்கிறது; இதனால் வேலூர் வளர்கிறது - மோடி

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக பெரும் தடையாக இருக்கிறது; அனைத்திலும் திமுக அரசியல் செய்கிறது - மோடி

திமுக ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது; இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது - மோடி

திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது; திமுகவின் குடும்ப அரசியல் காரணமாக தமிழக இளைஞர்களின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது

குடும்ப அரசியல், ஊழல், தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை எதிர்ப்பது ஆகியவையே திமுகவின் முதன்மையான நோக்கம் - மோடி

ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை, திமுக ஊழல் செய்வதற்காக பயன்படுத்திகொள்கிறது - மோடி

ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக அரசும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளது - மோடி

வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு ரூ.4300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தும் அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது - மோடி

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவன் எந்த குடும்பத்துடன், யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள்

ஜாதி, மதம், மொழி ரீதியில் தமிழ்நாட்டு மக்களிடம் பிரிவினையை திமுக ஏற்படுத்தி வருகிறது - மோடி

தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாக்காசாகிவிடும் என்பதால், பிரித்தாளும் அரசியலை திமுக செய்கிறது

நாட்டின் எதிர்காலமான பள்ளிக்குழந்தைகள் கூட தமிழ்நாட்டில் போதை மருந்துகளுக்கு அடிமையாகியுள்ளனர் - மோடி

திமுகவின் பிரித்தாளும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓய மாட்டேன் - பிரதமர் மோடி

உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரியவேண்டும் என்பதற்காக, தமிழ் மொழியை கற்று வருகிறேன் - மோடி

தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தும் வண்ணம் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தபோது திமுக அதை புறக்கணித்தது

நாடு முழுவதும் காங்கிரஸ், திமுகவின் போலி முகம் குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

திமுக, காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டார்கள்; அது யாருடைய நலனுக்காக என்பது அனைவருக்கும் தெரியும்

கச்சத்தீவை தாரைவார்த்ததால், அதன் அருகே மீன்பிடிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல்

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையை மறைத்து பொய்யான அனுதாபத்தை திமுகவும், காங்கிரஸ் கட்சியினரும் வெளிப்படுத்துகின்றனர்

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம் - பிரதமர் மோடி

தமிழ்நாட்டு மக்களின் கண்ணில் மண்ணை தூவி, கச்சத்தீவை, திமுகவும், காங்கிரசும் இலங்கைக்கு தாரைவார்த்து விட்டன

வேலூர் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை உண்டு; குஜராத் முதல்வராக இருந்தபோது வேலூர் தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன்

பெண்களை இழிவுபடுத்துவதில் திமுகவும், காங்கிரசும் எப்போதும் முதன்மையாக இருக்கின்றன - பிரதமர் மோடி

ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் - பிரதமர் மோடி

தமிழ்நாடு பெண் சக்தியை ஆராதிக்கும் பூமி, ஆனால், இண்டியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கிறார்கள் - பிரதமர் மோடி

இந்து தர்மத்தில் பெண் சக்தி குறித்து போற்றப்படுகிறது; ஆனால், காங்கிரசின் ராகுல் காந்தி அதை அழிப்போம் என்கிறார்

திமுகவினர் சனாதனத்தை அழிப்போம் என்கிறார்கள், ராமர் கோவிலை புறக்கணிப்போம் என்கிறார்கள் - பிரதமர் மோடி

ஏப்ரல் 19ஆம் தேதி பாஜக கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பது எனது கியாரண்டி - மோடி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எனது உரையை நமோ செயலி மூலம் தமிழிலும் நீங்கள் கேட்கலாம் - மோடி

வேலூர் மக்களின் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் பாஜகவினர் சென்று மோடி உங்களுக்கு வணக்கம் சொல்ல சொன்னதாக கூறுங்கள் - மோடி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments