“தங்கர் பச்சான் வெற்றி” என்ற கிளி ஜோதிடருக்கு வந்த சோதனை ஜோதிடரின் 4 கிளிகளையும் தூக்கிச்சென்ற வனத்துறை

0 597

கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது,பா.ம.க வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த செல்வராஜ் என்பவர் அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடம் கூறினார்

இந்த வீடியோ வனத்துறையினரின் கண்ணில் பட்டதால், தங்கர் பஞ்சானுக்கு ஜோதிடம் பார்த்த ஜோதிடருக்கு நேரம் சரியில்லாமல் போனது..! 4 கிளிகளை அடைத்து வைத்த குற்றத்திற்காக செல்வராஜை பிடித்துச்சென்ற வனத்துறையினர் கிளிகளை மீட்டனர்

இந்த நடவடிக்கைக்கு பா.ம.க தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கிளி ஜோதிடர் செல்வராஜையும் அவருடன் பிடித்துச்செல்லப்பட்ட மற்றொரு ஜோதிடரையும் வனத்துறையினர் வயது மூப்பு காரணமாக விடுவிப்பதாக தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments