கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம்

0 584

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, மதுபானக் கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவால் சதி செய்தது அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரிய வருவதாக கூறியுள்ளார்.


கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்காதது இவ்வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, முதலமைச்சராக இருப்பதற்காக கெஜ்ரிவாலுக்கு எந்த சலுகையும் காட்ட இயலாது என்றும் கூறியுள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments