டாஸ்மாக் கடையை அகற்றினால் மட்டுமே பெண்கள் ஓட்டு..!! ஆண்கள் ஓட்டுக்கு நாங்கள் என்ன செய்ய..?: தி.மு.க எம்.எல்.ஏ

0 445

ஆரணி தொகுதி தி.மு.க வேட்பாளர் தரணிவேந்தனுக்காக தனது தொகுதிக்குட்பட்ட படூர் கிராமத்தில் வாகனத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்தார் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ அம்பேத்குமார்.

திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வந்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய போது எங்கள் பகுதியில் ஒயின் ஷாப் இருக்கிறது அதனை எடுத்தால் தான் ஓட்டுப்போடுவோம் இல்லை என்றால் ஓட்டுப் போட மாட்டோம் என கூறினர் பெண்கள்.

ஒயின் ஷாப்பை எடுத்து விட்டால் பெண்கள் ஓட்டுப் போடுவீர்கள், ஆனால், ஆண்கள் எப்படி ஓட்டுப் போடுவார்கள் என கேள்வி எழுப்பினார் எம்எல்ஏ அம்பேத்குமார்.

ஆனாலும், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பெண்கள் கூறியதால், பெரியார், கருணாநிதி என பேச ஆரம்பித்த எம்எல்ஏ, பாஜகவை ஒழிக்க தங்களை ஆதரிக்க வேண்டுமென வேகவேகமாக கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments