''வாரிசு அரசியல், கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து தான் தி.மு.க.வின் நோக்கம்'' : நட்டா

0 383

இண்டியா கூட்டணி தலைவர்கள் சிறையில் உள்ளனர் அல்லது பெயிலில் இருக்கின்றனர் என விமர்சித்துள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, ஊழல் செய்வது தான் அக்கூட்டணியின் கொள்கை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியல், கொள்ளை அடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது தான் தி.மு.க.வின் நோக்கம் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து கரூர் பா.ஜ.க வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய நட்டா, மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய பொருளாதாரம் 5வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மதுரை திருமங்கலத்தில், விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாகவும் அவர் வாக்கு சேகரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments