சாயக்கழிவிற்கும் சாராய கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின்: இ.பி.எஸ்.

0 313

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து கஸ்பா பேட்டை பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சாயக்கழிவு பிரச்சனைக்கும் சாராய கழிவுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின் என்றார்.

அதிமுகவில் பார்த்து பார்த்து கொண்டு வரப்பட்ட மக்கள்நலத் திட்டங்களை மூடியதுதான் திமுக அரசின் சாதனை என்று கூறிய இ.பி.எஸ்., தேர்தலுக்கு முன் ஸ்டாலின் வைத்த புகார் பெட்டியின் நிலை என்னவானது என கேள்வி எழுப்பினார்

பொய் பேசி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற அவர், பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்திய அதிமுக ஆட்சியை இழந்தாலும் மக்களுக்கு துரோகம் செய்யாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments