ரூ.100யை கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்யும் திமுக: சீமான்
சாதனைகள் எதுவும் இல்லாததால், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லி வாக்கு கேட்பதாக திமுக-வை சீமான் விமர்சித்துள்ளார்.
வடசென்னை தொகுதி நா.த.க வேட்பாளர் அமுதினியை ஆதரித்து தண்டையார்பேட்டையில் வாக்கு சேகரித்து பேசிய அவர், நூறு ரூபாயை கொடுத்துவிட்டு, திமுக ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
வேலூர் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்களை இழிவாக பேசியதாகக்கூறிய சீமான், 5 ஆண்டுகளில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு எந்த தீர்வையும் திமுக பெற்றுத்தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
Comments