பாஜகவிற்கு அஞ்சியே ஐயுஎம்எல் கொடி இடம்பெறவில்லை: பினராயி விஜயன்

0 458

கேரளாவின் வயநாட்டில் மனுத்தாக்கலின்போது ராகுல் காந்தி நடத்திய ரோட் ஷோவில் பாஜகவைக் கண்டு அஞ்சியே முஸ்லீம் லீக் கட்சிக் கொடிகள் இடம்பெறவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். 

இதற்கு பதிலளித்த கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், பிரதமர் மோடியைக் கண்டு பினராயி விஜயன் தான் பயப்படுவதாகவும் அதனால்தான் பிரதமரை விமர்சிக்காமல் ராகுல்காந்தியை விமர்சிப்பதாகவும் கூறினார்.

2019 தேர்தலின்போது ராகுலின் ரோட் ஷோவில் இடம்பெற்ற ஐ.யு.எம்.எல். கொடிகள் பாகிஸ்தான் கொடி என தகவல் பரவிய நிலையில், இந்தமுறை அக்கட்சியின் கொடிகள் ரோட் ஷோவில் இடம்பெறவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments