ஜாம்பியாவில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை தாக்கிய யானை
ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள கஃபா வனஉயிரியல் பூங்காவில் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை யானை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன 6 பேர் சென்ற வாகனத்தை தூரத்தில் இருந்து ஓடி வந்த காட்டுயானை தாக்கி கவிழ்த்தது.
யானை வருவதை படமெடுக்கத் தொடங்கிய நிலையில், அது தாக்கியதும் பயணிகள் அலறினர்.
அதில் 80 வயது அமெரிக்க மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
தந்தங்களால் வாகனத்தை யானை கவிழ்க்கும் வரை அதன் தாக்குதல் படமாக்கப்பட்டிருந்தது.
Comments