பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் தமிழகத்திற்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது : கர்நாடகா அரசு
பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் தமிழகத்திற்கு தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ஏற்கனவே நிலுவையில் உள்ள 3.6டி.எம்.சி நீர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடை இன்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருப்பு உள்ளதால் தண்ணீர் திறந்து விடலாம் என்றும் வலியுறுத்தினர். அதற்கு, நீர் இருப்பு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் கர்நாடக அரசு கூறியுள்ளது.
Comments