சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல் விலை குறையவில்லை : பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2014 ஆம் ஆண்டு 105 டாலராக இருந்த போது 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது கச்சா எண்ணெய் விலை 74 டாலராக குறைந்திருக்கும் நிலையில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலை 110 ரூபாய்க்கு மத்திய அரசு விற்பனை செய்து வருவதாக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், மக்களின் பணத்தை மத்திய அரசு சுரண்டுவதாக விமர்சித்தார்.
Comments