25 ஆண்டுகளுக்கு பிறகு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு
தைவானில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான ஹுவாலியன் சாலையில் ஜின்வென் மற்றும் கிங்சுய் சுரங்கப் பாதைகளில் சிக்கிய 77 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான நிலநடுக்கத்தால் உயரமான கட்டடங்கள், பாலங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரம் பேர் வரையில் காயமடைந்ததாகவும், சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவமனை ஒன்றின் பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தொட்டில்கள் நிலநடுக்கத்தில் நகர்வதையும், அதனை செவிலியர்கள் பத்திரமாக பிடித்து வைத்திருக்கும் வீடியோவும் வெளியாகி நிலநடுக்க தாக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
Comments