ஒரே நேரத்துல எத்தனை பஞ்சாயத்துப்பா... வி.சி.க தொண்டரின் எனது கொடி, எனது உரிமை...

0 550

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

பேச்சை துவங்கும் முன்பே கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் தனக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என ஆரம்பிக்க அதற்கு உதயநிதி பதிலளித்தார்.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைத்தது? என மீண்டும் உதயநிதி கேள்வி எழுப்ப, கூடி இருந்த பெண்களோ எங்களுக்கு கிடைக்கவில்லை என பதில் அளித்து கூச்சலிட்டனர்.

உங்கள் யாருக்குமே கிடைக்கவில்லையா? எனக் கேட்ட உதயநிதி, தகுதி உள்ள அனைவருக்கும் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

பேச்சுக்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை கையில் ஏந்தி அசைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தவரிடம் அண்ணே கொடிய கொஞ்சம் இறக்குங்க அஞ்சு நிமிஷத்துல பேசிட்டு இங்க இருந்து ஓடிடுவேன் என கூறினார் உதயநிதி.

அவரிடமிருந்த கொடியை திமுகவினர் பறித்துக் கொள்ள அவரோ எனது கொடி எனது உரிமை என உரிமை முழக்கம் எழுப்பினார்.

பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உதயநிதி அடுத்த டாப்பிக்கை ஆரம்பிக்க, அங்கேயும் ஒரு பெண் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்குங்கள் என்று முட்டுக்கட்டை போட்டு பிரேக் ஏற்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments