இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் ரூ.1.5 கோடி வழிப்பறி?... புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வரும் போலீசார்

0 311

சென்னை மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து சென்றுவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 லட்ச ரூபாய் மட்டுமே வழிப்பறி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தாளம்பூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மேலாளரான வினோத்குமார் என்ற அந்த நபர், கல்லூரிக்குச் சொந்தமான பணத்தை உரிமையாளர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, தன்னை பின் தொடர்ந்து வந்த நபர்கள் பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாகத் கூறியுள்ளார்.

புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments