இஸ்ரேல் வான் தாக்குதலில் இங்கிலாந்து, போலந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க நாட்டினர் பலி

0 375

காஸாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.

காஸாவிற்கு கடல் வழியில் எடுத்து செல்லப்பட்ட உணவு பொருட்களை World Central Kitchen என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், குண்டு துளைக்காத 2 கார்களில் எடுத்து சென்றபோது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை வீசி தாக்கியது.

தொண்டு நிறுவனத்தின் லோகோ காரின் மேல்புறத்தில் ஒட்டப்பட்டிருந்தபோதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டன குரல்கள் எழுந்த நிலையில், இரவு வேளையில், அடையாளம் காண்பதில் ஏற்பட்ட குளறுபடியால் மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments