போன வாரம் கலரா இருந்தவரு இப்போ இப்படியாம்... கத்திரிக்காய் மாதிரி வேட்பாளரையும் பார்த்து வாங்குங்க...

0 471

மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க வேட்பாளர் சரவணன், பிரசாரத்தை ஆரம்பிக்கும் போது கலரா இருந்த தான் தற்போது கறுத்து விட்டதாகவும், அடுத்த வாரம் வடிவேல் ஒரு படத்தில் கருப்பு பெயிண்ட் பொடி எல்லாம் கொட்டின மாதிரி வருவது போல ஆயிடுவேன் என கூறினார்.

வேட்பாளரான சரவணன் இங்கே தான் மருத்துவமனை வைத்திருக்கிறார் வெற்றிபெற்ற பிறகு வெங்கேடசன் மாதிரி கதை விட்டுட்டு போக மாட்டார் என கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்படி ஏதாவது நடந்தால் அவரது மருத்துவமனைக்கு முன்னால் போய் உட்கார்ந்திர மாட்டோம் என கூறினார்.

ஒரு நேரத்திற்கு வைக்கும் சாம்பாருக்கான காய்கறிகளையும், அரிசியையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், நம்மை 5 ஆண்டு ஆளப் போவோரையும் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டுமென தெரிவித்தார் செல்லூர் ராஜூ.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments