ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தமது அடுத்த ஆட்சி காலத்திலும் தொடரும் என்று பிரதமர் மோடி

0 344

 ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தமது அடுத்த ஆட்சி காலத்திலும் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், 70 ஆண்டுகாலம் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்பதற்காக தன் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மூன்றாவது முறை பாஜக ஆட்சிக்கு வந்தால்  நாடேபற்றி எரியும் என்று ராகுல்காந்தி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், இது தான் ஜனநாயகத்தின் மொழியா என்று கேள்வி எழுப்பினார்.

இது போன்று பேசுபவர்ளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தர வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments