அண்ணன் சீமானிடம் ஒற்றை டவுசர் தான் இருந்ததா? என்னை கைது பண்ணுவியா... சிறைப்பறவைடா நான்...

0 430

தமிழகத்தில் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் , அத்தனை கட்சிகளையும் சமரசமின்றி ஒற்றை ஆளாக எதிர்த்து நிற்கும் ஹீரோ நான் என்று சீமான் ஒட்டன்சத்திரம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்

ஸ்டெர்லைட், சிப்காட் தொழிற்சாலைகளை அகற்றி விட்டு கரும்பில் இருந்து பல விதமான பொருட்களையும், ஆட்டு பண்ணை , மாட்டுப்பண்ணை வைத்து படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அரசு பணி கொடுப்பேன் , பசி என்ற சொல்லையே ஒழித்து விடுவேன் என்ற சீமான், என்னை பார்த்து சிலர் பைத்தியகாரன் என்று சொல்கிறார்கள் என்றார்

பள்ளி பருவத்தில் ஒற்றை டவுசருடன், படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுவனான என்னை கண்டு இன்று பெரிய பெரிய கட்சிகள் பயப்படுப்பது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பினார்

தான் கட்சி ஆரம்பித்து ஜெயிலுக்கு போனவனில்லை.. ஜெயிலுக்கு போயிட்டு வந்து தான் கட்சியே ஆரம்பிச்சேன் எதற்கும் அஞ்சாத சிறைப்பறவைடா நான்.. என்றார் சீமான்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments