தில், திராணி, தெம்பிருந்தால் என் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் - சாவல் விடுத்த இபிஎஸ்

0 369

ஏழை மாணவனும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக தமது ஆட்சியில் அமல்படுத்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு திட்டம் போல ஒரே ஒரு திட்டத்தையாவது ஸ்டாலினால் கூற முடியுமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கரில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், வாக்குறுதிகள் என்ற பெயரில் 520 பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அவற்றுள் எதையும் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

தில், திராணி, தெம்பிருந்தால் தாம் எழுப்பும் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments