குடிநீர் பிரச்சனை, வேலையின்மையை தீர்ப்பதாக கூறி ஓ.பி.எஸ். வாக்குசேகரிப்பு

0 341

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராமநாதபுரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம், குடிநீர் பிரச்சனை தீர்ப்பதாகவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் கூறி வாக்குச் சேகரித்தார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன்,  திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் கூட்டணி கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். 

கீழையூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், கன்னித்தோப்பு கடைவீதியில் உள்ள டீக்கடையில் டீ போட்டு பொது மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார் .

தென்காசி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் கொடிகுறிச்சியில் வாக்குச் சேகரித்தார். ஊர் மேல் அழகியான் கிராமத்துக்கு சென்ற அவரை தொண்டர்கள் பாஜக தொப்பி அணிந்தபடி வரிசையாக நின்று வரவேற்பு அளித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments