நாகையில் பாஜக வேட்பாளர் மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின், மக்கள் தனக்கு ஃபோன் செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்து நிற்பேன் என்றார்.
நெல்லை மாவட்டம் கல்லூரில் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தாம் வெற்றி பெற்றால் கல்லூரில் ரயில்கள் நின்று செல்ல ஆவன செய்வேன் என்றார்.
புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் உள்துறை அமைச்சர் நமசிவாயத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரம் செய்தார். அவர்களை வரவேற்க கிரேன் மூலம் 55 அடி நீள மாலை எடுத்துவரப்பட்டது.
நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.எம்.ரமேஷ் மீனவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் அவர் கூறினார்.
பட்டுக்கோட்டையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ராமநாதபுரத்தில், ஓ. பன்னீர்செல்வம் வெற்றி பெறுவதை தடுக்கவே அவர் பெயரில் 5 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments