திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம்

0 236

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரைவில் முடிக்க அருணாச்சலம் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

 

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து, குமாரபாளையத்தில் பிரச்சாரம் செய்த பிரேமலதா, மின் கட்டண உயர்வால் விவசாயமும், விசைத்தறி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியின் அறுமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதிஷ், அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் தயாநிதி மாறன் தொகுதி பக்கமே செல்வது கிடையாது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments