தமிழகத்தில் ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

0 255

தேனி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், உசிலம்பட்டி அருகில் உள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் போட்டியிடும் தன்னை வெற்றிபெறச் செய்யும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

 

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, ரிஷிவந்தியம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார்.

 

பரமத்தி வேலூரில் அமைச்சர் மதிவேந்தன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிப் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments