38 திமுக கூட்டணி எம்.பி.க்கள் 5 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்யவில்லை: எஸ்.பி.வேலுமணி

0 249

தமிழக இளைஞர்கள் போதையின் பிடியில் இருப்பதாகவும், இந்நிலையை மாற்ற தனக்கு வாக்களிக்கும்படி, கே.வி. குப்பம் பகுதியில் பிரசாரத்தில் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளரும் புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசினார்.

 

 

நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலத்தில் பேசி வாக்கு சேகரித்தார்.

 

திருவாடானையில் ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேச வேண்டிய நேரத்தில் எல்லாம் மௌனசாமியாக இருந்துவிட்டு இப்போது தொண்டர்களின் காலில் விழுந்து கெஞ்சி என்ன பயன் என ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்தார்.

 

திமுக கூட்டணி எம்.பி.க்கள் 38 பேர் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எந்த வேலையும் செய்யவில்லை என்று, பவானிசாகரில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் யோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments