முரசா ? இரட்டை இலையா ? கன்பியூஸ் ஆயிட்டாங்க.. பதறிபோன தே.மு.தி.க வேட்பாளர் பார்த்தசாரதி

0 500

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்காக திருவல்லிக்கேணி பள்ளி வாசலில் தீவிரமாக வாக்கு கேட்ட தமிழ்மகன் உஷேன், இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்க என்று பழக்கதோஷத்தில் கூற பதறிப்போனார் வேட்பாளர் பார்த்தசாரதி

இஸ்லாமிய நண்பர்களை கட்டியணைத்து வாக்கு கேட்ட வேட்பாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் உண்மையான நண்பரான இப்ராஹிம் ராவுத்தரை முன்னிறுத்திதான் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியதாக உருகினார்.

பின்னர் பார்த்தசாரதி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அ.தி.மு.க நிர்வாகி பாலகங்கா காதில் ஏதோ ரகசியத்தை வேறு சொல்ல அவரும் அதனை ஆமோதித்த படியே தலையை ஆட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments