மலைச்சாலையின் நடுவே திடீரென தீப்பற்றி எரிந்த கார்

0 509

பொள்ளாச்சியிலிருந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் ரெனால்ட் டஸ்டர் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றுள்ளனர்.

மலைச்சாலையில் கோம்பைக்காடு அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பக்கம் இருந்து புகை எழுந்துள்ளது.

உடனடியாக 6 பேரும் கீழே இறங்கிய நிலையில், வாகனம் மளமளவென தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது.

சாலை நடுவே கார் எரிந்துகொண்டு இருந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நின்றன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments