உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..!? பால் கேன் உள்ளும் ஆய்வு செய்த கறார் ஆபீசர்ஸ்..

0 374

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கருமேணி ஆற்று பாலம் பகுதியில் நேற்று நள்ளிரவு பறக்கும் படையினர் ஆழ்வார்திருநகரி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மாலா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மொபட்டில் சென்ற பால் வியாபாரியை மறித்து பால் கேனை திறக்க சொல்லி ஆய்வு செய்தனர்

திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்த வேனை தடுத்து நிறுத்தி வேனில் ஏறி சோதனை செய்தனர்.

சரக்கு வாகனத்தில் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற குடும்பத்தினரை தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் செல்வின் , லோடு வாகனத்தில் குடும்பத்துடன் இப்படி செல்லலாமா..? என கறாராக அட்வைஸ் செய்தார்

லாரி, கார், கோழி வண்டி, பைக் என எதையும் விடாமல் அதில் வந்தவர்களை சோதித்தினர்

இவ்வளவு சின்சியராக வாகன சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த டாடா சுமோ வாகனத்திற்கு மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகி 2 மாதங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments