குறுகிய தெருவில் வழிவிடுவதில் தகராறு - அடித்துக்கொண்ட ஓட்டுநர்கள்

0 462

நிலக்கோட்டையில் காளியம்மாள் தெரு என்ற குறுகலான சந்தில் எதிரெதிரே வந்த ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் ஓட்டுநர்களுக்கு வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டது.

இருவரும் சட்டை கிழிய சண்டையிட்டுக் கொண்ட நிலையில், டாடா ஏஸ் ஓட்டுநர் தனது வாகனத்தை பின்னோக்கி இயக்கி பிறகு வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார். 

பதிலுக்கு ஆட்டோ ஓட்டுநர், கீழே கிடந்த செங்கற்களை எடுத்து, டாடா ஏஸ் வாகனத்தின் கண்ணாடி மீது எறிந்தார்.

ஆவேசத்துடன் டாடா ஏஸில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுநர், கையில் கிடைத்த இரும்பு கம்பியால் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்க முயன்றார்.

மற்றவர்கள் வீடியோ எடுப்பதை பார்த்ததும் இருவரும் தகராறை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments