கனிமொழி மகனிடம் ரூ 15 லட்சம் வந்தது எப்படி..? எட்டாம் வகுப்பு படித்தவர் மருத்துவரானது எப்படி ?

0 541

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியின் கணவர் மற்றும் மகன் வெளி நாட்டு குடியுரிமை பெற்று இருக்கும் நிலையில், பான் கார்டே இல்லாத அவரது மகனுக்கு இந்திய வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் இருப்பதாகவும், அது வரிஏய்ப்பு என்றும் 2 ஜி ஊழல் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி கோரிக்கை வைத்தார்

இதற்கு பதிலடியாக , எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி டிப்ளமோ படித்த மருத்துவர் என்று விளம்பரம் செய்து வருவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டினர். இருதரப்பும் ஒருவர் மனுவை ஒருவர் எதிர்த்த நிலையில் , ஒரு கட்டத்தில் பரஸ்பரம் சமாதனம் ஆனதால் இருவரது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments