மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சொத்து விவரம் அவர்களது வேட்புமனு மூலம் தெரிய வந்தது

0 299

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் தமிழக பிரபலங்களின் சொத்து விவரம் அவர்களது வேட்புமனு மூலம் தெரிய வந்துள்ளது.

ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் அதிகபட்சமாக 593 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் விஜய் வசந்தின் சொத்து மதிப்பு 61 கோடியே 89 லட்சம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.

பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி 60 கோடி ரூபாய், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு 57 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு 54 கோடி ரூபாய் சொத்துகளும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு 53 கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளன.

திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவுக்கு 17 கோடி ரூபாயும்  திமுகவின் தயாநிதி மாறன் 7 கோடி ரூபாய், ஆ.ராசா 3 கோடி சொத்துகளும் வைத்துள்ளனர்.

பா.ஜ.க.வின் தமிழிசை செளந்தரராஜனுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் அண்ணாமலைக்கு ஒன்றரை கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவர்களது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments