நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தமிழகம் எங்கும் தீவிர பிரச்சாரம்

0 247

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் டவுன் பகுதியில் உள்ள ஈசான விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு சேலம், தலைவாசல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி அருகே டீ போட்டு கொடுத்தும், சலவை செய்தும், கிரிக்கெட் விளையாடியும் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments