ரோம் நகர சிறைச்சாலையில் பெண் கைதிகளின் பாதங்களை கழுவி, முத்தமிட்ட போப்பாண்டவர்

0 657

ஈஸ்டர் தவக்காலத்தை முன்னிட்டு, ரோம் நகர சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவி, முத்தமிட்டார்.

சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, இயேசு தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து, அவர்களது பாதங்களை கழுவியதை நினைவுகூரும் விதமாக இந்த சடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இதற்கு முன் போப் பதவி வகித்தவர்களால் வாடிகன் தேவாலயத்தில் கடைபிடிக்கப்பட்டுவந்த சடங்கை, போப் பிரான்சிஸ் முதன்முதலாக சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் கடைபிடிக்கத் தொடங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments