பா.ம.க வேட்பாளரின் காரை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றதால் வாக்குவாதம்

0 433

விதிமுறையை மீறி கட்சி கொடியுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்றதாக சேலம் பாமக வேட்பாளர் அண்ணாதுரையின் காரை பறிமுதல் செய்ய போலீசார் முயன்ற போது இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பு மனு பரிசீலனைக்கு வந்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் போது கார் நிறுத்தப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கட்சி கொடி இல்லாமல் செல்ல காரை போலீசார் அனுமதித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments