அமெரிக்காவில், கப்பல் மோதி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விவகாரம் - அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில், கப்பல் மோதி ஆற்றுப்பாலம் விழுந்த விவகாரத்தில், கப்பலில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் சமயோஜிதமாக செயல்பட்டு உயிர் சேதத்தை தவிர்த்ததாக அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவு, டாலி என்ற சரக்கு கப்பல் மோதியதால் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இடிந்து விழுந்தது.
சரக்கு கப்பலில் பயணித்த 22 மாலுமிகளும் இந்தியர்கள் என கூறப்படும் நிலையில், பாலத்தின் மீது கப்பல் மோதிவிடும் என்பதை முன்கூட்டியே கணித்த அவர்கள் உடனடியாக போக்குவரத்து துறையை எச்சரித்தனர்.
இதையடுத்து மக்கள் செல்லாத வண்ணம் பாலம் மூடப்பட்டதால் பெரியளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
Comments