நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடையவுள்ளதையடுத்து, வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சக்கரபாணி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் வசந்த் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
விளவங்கோடு சட்டமன்ற இடத்தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளர் நந்தினி வேட்புமனுதாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சிகளை சர்ந்த நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி பா.மக. வேட்பாளர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ராசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அருணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Comments