தமிழ்நாடு முழுவதும் களைகட்டியுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்

0 276

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். கொசூர் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் நேரு தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.


இராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பால்குட திருவிழாவில் பங்கேற்றவரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

காரைக்குடியில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிம்மக்கல் கல்பாலம் வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பேண்ட் வாத்தியம் முழங்க தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே அதிமுக தேர்தல் பணிமனையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments